ஓரு பிரபலம் தேவரை பற்றி இப்படி சொல்கிறார்!


தேசியபக்தி,தெய்வ பக்தி இரண்டிலும் ஓப்பில்லாதவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,"தேவர்" என்றாலே அவரைத்தான் குறிக்கும். எழுந்தால், நடந்தால்,பேசினால் அவர் சண்டமருதம்.
என் இளம் வயதில் அவரை ஒரு சிலமுறை பார்த்திருக்கிறேன்.பலமுறை அவரைப்பற்றி பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அரசியல்-ஆன்மீக வரலாற்றில் அவர் ஒரு தனி சகாப்தம்.
ஓரு முறை சீனிவாச அய்யங்கர்(அந்த காலத்து பிரபல வக்கீல் பெரும் தலைவர்) மகன் வழி பேரனோடு பேச நேர்ந்தது.
சீனிவாச அய்யங்கர் மகன் வழி பேரன் அந்த பிரபலத்திடம் சொன்னார் "தேவர் அவர்களின் தகப்பனார் பெரும் ஜமீன் தார், நிறைய நிலபுலன்கள் உண்டு, சொத்து வில்லங்கம் தொடர்பாக தேவரது வழக்குகளை என் பாட்டனார் எடுத்து நடத்தினார்.அதாவது 1927 காங்கிரஸ் மகாநாடு சென்ன்னையில் நடக்கிறது, பெரிய தலைவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்தனர், மாநாட்டின் பொறுப்பாளர் என் பாட்டனார் வக்கீல் சீனிவாச அய்யங்கர். அந்த சமயத்தில் சொத்து வழக்கு சம்பந்தமாக தேவர் அவரை சந்தித்தார், அவரோ மாநாடு இருக்கிறது நான்கு வழக்கை பார்க்க நாட்கள் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கர்
தேவரை பார்த்து உரிமையுடன் அதே சீனிவாச அய்யங்கர் கேட்கிறார் " தேவர்! ஆமாம்... நான்கு நாட்கள் சென்னையில் தானே இருக்கபோகிறீகள்?"
"ஆமாம்" என்கிறார் தேவர்,
"அப்படி என்றால் என் விருந்தினர் ஒருவருக்கு உதவியாய் இருக்கவேண்டும் என வேண்டுக்கொள் இடுகிறார் சீனிவாச அய்யங்கர்.
தேவரும் ஏற்றுக்கொள்கிறார்.
சீனிவாச அய்யங்கர் சொன்னதுப்போல அவர் அந்த விருந்தினருக்கு உதவியாய் இருந்தார் மற்றும் அந்த விருந்தினருக்கும் அவருக்கும் பெரும் நட்பு ஏற்ப்பட்டது, அவர் தனது மாநிலத்துக்கு தேவரை அழைத்து சென்றார்..
தனது அன்னையிடம் உனது கடைசி மகன் வந்திருக்கிறான் என்று தேவரை காட்டினார்... அவர் வேறு யாருமில்லை நம் நேதாஜிதான் ...."நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" தான்...
இந்த சம்பவத்தை சீனிவாச அய்யங்கர் பேரனிடம் அறிந்தவர் வேறு யாருமில்லை - "நல்லி குப்புச்சாமி செட்டியார்"தான்... (நல்லி சில்க்ஸ்- சென்னை)
ஆதாரம்:-
"பசும்பொன் தேவர் கட்டுரைகள்" புத்தகம்(குமரன் பதிப்பகம்)
- அணிந்துரையில் திரு.நல்லி குப்புசாமி செட்டி (நல்லி சில்க்ஸ்)
இவ்வாறு விளக்குகிறார்.
-ஆர்.தியாகு

No comments:

Post a Comment

Ads

Ads