நேதாஜி ஆற்றிய எழுச்சியுரை !

nethaji subash


" அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால்...

அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால்..
நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால்.
நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது 

எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம்.

புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... !
ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது!
கிளர்ந்தெழுங்கள்!

உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் ..

அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள்.

நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம்.

டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி "

(பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு "சலோ டெல்லி" என இந்தியாவை மீட்க திரண்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது)

-பகிர்தல் : ஆர்.தியாகு

No comments:

Post a Comment

Ads

Ads