நேதாஜி மர்மம் பற்றிய கேள்விகளும் - பசும்பொன் தேவரின் பதில்களும்!

thevar nethaji -mukkulathormedia

நேதாஜி மர்மம் பற்றிய கேள்விகளும் - பசும்பொன் தேவரின் பதில்களும்!



(கல்கத்தா நிருபர்கள் கூட்டத்தில் தேவர் கொடுத்த பேட்டி)

நிருபர் கேள்வி:- 
நேதாஜி சாகவில்லை என்பது தங்கள் நம்பிக்கையா ? அன்றி உண்மையேதானா?

தேவர் பதில் :-
நம்பிக்கையல்ல, உண்மை நடப்பு

நிருபர் கேள்வி:- இம்மாதிரி மறைந்திருக்க வேண்டுமன்ற திட்டத்தை நேதாஜி எதற்காக மேற்கொண்டார்?

தேவர் பதில் :-
அவர் உண்மையான சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தார்.அதன் முதற்பகுதி தோற்றுவிட்டது.தொடர்ந்து போராடுவது அவரின் திட்டம்.அந்த திட்டம் நிறைவேறத் தான்.

நிருபர் கேள்வி:-
தாங்கள் நேதாஜியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? அவரை நேரில் சந்தித்ததுண்டா? அவ்வாறானால், எத்தனை நாட் கள் அவருடன் தங்கி இருந்தீர்கள்?

தேவர் பதில் :-

1950இல் கொரியப் போரின் சமயம் நானிந்தியாவைக் கடந்து சென்றிருந்தபோது நேதாஜியோடு ஒரு தடவை நேரடியாக தொடர்புக்கொண்டேன்.

1949 நவம்பரில் கல்கத்தா வரும்படி சரத்பாபுவிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. கல்கத்தா சென்றேன். அப்பொழுது சரத்பாபு, சுகவீனமாக இருந்தார். 10 நாதள் அவரும் நானுமாக பேச்சு நடத்திவிட்டு 1949 டிசம்பர் 17இல் இந்தியாவை விட்டுக் கடந்தேன். நேதாஜியைச் சந்தித்து விட்டு, 1950 நவம்பரில் தாயகம் திரும்பினேன், எனது இந்த யாத்திரை நமது சர்க்காருக்கும் தெரியுமெனக் கருதுகிறேன். நான் அவருடன் எத்தனை நாட் கள் தங்கியிருந்தேன் என்பதைக் கூறுவதற்கில்லை.
(-------தொடரும்------)

பகிர்தல் - ஆர்.தியாகு
*********************
பசும்பொன் தேவர் கட்டுரைகள் - பக்கம் 97 - ஜீவபாரதி- குமரன் பதிப்பகம்

No comments:

Post a Comment

Ads

Ads