நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் இராமாயணமும் மகாபாரதமும்! -

thevar-mukkulathormedia

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகும் இராமாயணமும் மகாபாரதமும்! -
எப்படி என குழப்பமாக இருக்கிறதா? - பசும்பொன் தேவர் சொல்லும் விளக்கத்தை படியுங்கள் புரியும் !




மனித வாழ்க்கை தெய்வீகத்தைப் பெறுவதற்காகவே என்பதுதான் நாம் கையாண்ட நடைமுறை .அப்படி வருகின்ற போது தெய்வீகத்தைப் பெறுவதற்க்கு இடையூறாக இருப்பவை மூன்று ஆசைகள் .
அந்த மூவாசையைத்தான் ஞானிகள் இரண்டசாசை என்று சுருக்கினார்கள் .

மண் - பொன் -பெண் என்ற மூன்று ஆசையாக இருந்ததை மண்ணாசையும் பொன்னாசையும் பொருள்தான் .
மண் இருந்தாலும் பொன் கிடைக்கும் .பொன் இருந்தாலும் மண் கிடைக்கும் .ஆகையால் இரண்டையும் சேர்த்து இதைக் காஞ்சனம் என்று ஒரே வார்த்தையில் முடிக்கலாம் .

பெண் என்ற ஒன்றைக் காமம் என்று வைத்தார்கள் .ஆக மூவாசை என்று வைத்த மண் -பொன் -பெண் என்ற மூன்றை காம -காஞ்சனம் என்று இரண்டாகக் குறைத்தார்கள் .

இந்த இரண்டின் மூலமும் வருகின்ற அழிவு என்ன ? என்பதைக் காட்டுவதற்காக ,அகில இந்தியாவிற்கும் தெரிவிப்பதற்காக தமிழ்நாட்டில் சிறப்பாக இலக்கியங்களின் ரூபம் காட்டுவதற்காகத் தான் இரண்டு நூல்கள் வந்தன .

காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் துரியோதனன் .
காமத்தின் மூலம் அழிந்தவன் ராவணன் .

காமத்தின் மூலமாக உலகம் என்னிலை பெரும் ? என்னிலையை உடையவனும் எப்படிக் கெடுவான் ?என்பதைக் காட்டுவதற்க்காகவே இராமாயணம் ஒரு நூலாக வந்தது .

காஞ்சனம் என்ற மண்ணாசையும் ,பொன்னாசையும் வைத்து பங்காளிக்கு உரியதைக் கொடுக்க மறுக்கும் காஞ்சனம் எப்படி சாம்ராஜ்யங்களை அழிக்கும் என்பதைக் காட்டுவதற்க்காகவே பாரதம் ஒரு நூலாக வந்தது .

அந்த இரண்டு முறையில் சாதாரணமான முறையில் வருகின்றவர்கள் நூலை ஆராய்ச்சி செய்வார்கள் ஆனால் பொறுப்பு வாய்ந்த மேதைகள் அந்த நூலுக்கு ஆதாரமான குறிகோளைக் கவனிப்பார்கள் .
புதையுண்ட ஒன்றைப் பார்ப்பது புத்திசாலியின் கடமை .புறத் தோற்றத்தை பார்ப்பது வீண் வாழ்க்கை வாழ்கின்றவனின் பழக்கம் .

அப்படியுள்ள நிலையில் இந்த இரண்டு நூலும் இரண்டு புதைபட்ட பொருள்களை வைத்திருக்கின்றன .
இராமாயணம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் வாதிஷ்டம் என்கிற ஞான நூலாகும் அதேபோல பாரதம் வைத்திருக்கின்ற புதைப்பட்ட பொருள் தான் பகவத் கீதை என்கின்ற அதிஞான நூலாகும் .



-பகிர்தல்: விக்னேஷ் (Vignesh Tuticorin)

No comments:

Post a Comment

Ads

Ads