”நேதாஜி பயங்கரவாதியா?"

nethaji subash

——————————————————————————————
“ஹிட்லரின் காட்டு மிராண்டிதனத்தை ஒழிக்க இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவாக களமிறங்குகிறது,இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மீது எனக்கு அனுதாபம் உள்ளது”- காந்தி.



“ஹிட்லர் ஐரோப்பாவில் செய்த காட்டுமிராண்டிதனங்களைத் தான் இங்கிலாந்து இந்தியாவில் செய்தது.சொந்தநாட்டு மக்கள் மீது இல்லாத அனுதாபம் இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மீது எதற்கு?” - நேதாஜி.

————————————————————————————

சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை சந்தித்தார்,இதை சுட்டி காட்டி மிதவாதிகள் நேதாஜி அவர்கள் ஒரு சர்வாதிகாரி,பயங்கரவாதி என்று வாதிட்டனர்.நேதாஜியை பார்த்த ஹிட்லர்,”வரும்கால இந்தியாவின் சர்வாதிகாரியை வரவேற்கிறேன்” என்றார்,அதற்கு நேதாஜி சற்றும் தாமதிக்காமல்,”சுதந்திர இந்தியாவை விரும்பியே உங்களிடம் வந்துள்ளேன்,தங்களை ஆளும் சக்தியை இந்திய மக்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்பார்கள்” என்றார்.

———————————————————————————
1939 ஆம் ஆண்டு இந்த சந்திப்புக்கு முன் நடந்தது இது தான்,நேதாஜி பார்வர்ட் ப்ளாக் என்ற இயக்கத்தை துவக்கி நாடு தோறும் சுற்றுப்பயணம் செய்தார்,தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சந்தித்து விவாதித்தனர்.காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதை உணர்த்தினார்,காங்கிரசில் இருந்து இடதுசாரிகளை வெளியேற்ற அவர்கள் செய்த சதிகளை மக்களிடம் கொண்டு சென்றார்.

1939 செப்டம்பர் 3 மாலை,இரண்டாம் உலகப்போரின் போது,
சென்னை கடற்கரை திலகர் சதுக்கத்தில் எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைமையில் பார்வர்ட் ப்ளாக் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது,அங்கு அவர் பார்வர்ட் ப்ளாக்கின் தமிழக கிளையைத் துவக்கி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அதற்கு தலைவர் ஆக்கினார்,தேவரை ‘தென்னாட்டு போஸ்’ என்று அழைத்து பெருமைப்படுத்தினார்.அந்த நேரத்தில் ஜெர்மனி பிரிட்டனின் மீது நேரடி போரை அறிவித்தது,இந்த செய்தி நேதாஜியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்டு உற்சாகம் அடைந்த நேதாஜி,”நான் முன்பு பேசிய போது பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேற ஆறுமாத நோட்டீஸ் தர சொன்னேன்,ஆறு மாதத்தில் என்ன நடந்துவிடும் என காங்கிரஸ் வலதுசாரிகள் கேலி பேசினார்,ஆனால் நான் சொன்னபடியே ஆறாவது மாதத்தில் யுத்தம் வெடித்துவிட்டது,நான் எதிர்பார்த்து இருந்த தருணம் வந்துவிட்டது,நமது இறுதி போராட்டத்தை இப்போது துவக்கினால் வெற்றி நிச்சயம்”என்றார்.

இந்நிலையில் பிரிட்டன்,இந்தியாவும் ஜெர்மனிக்கு எதிராக யுத்தம் புரியும் நேச நாடுகளில் ஒன்று என்று அறிவித்தது,முதலில் காங்கிரஸ் இதை ஏற்க மறுத்து தீர்மானம் போட்டது,இதைக்கண்டு உற்சாகம் அடைந்த நேதாஜி தமிழகத்தின் மதுரையில் நடந்த பசும்பொன் தேவர் தலைமையிலான கூட்டத்தில் பேசினார்,”உலகமே யுத்தத்திற்கு தயாராக இருக்கும்போது இந்தியர்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டும்,காங்கிரஸ் தலைவர்கள் கலந்தாய்வு என்ற பெயரில் புது டில்லி தர்பாருக்கு அடிக்கடி புனிதயாத்திரை செல்வது மட்டும் சுதந்திரம் தராது” என்றார்.

இதற்கு முன் பேசிய தேவர்,”காங்கிரஸ் தலைமையின் மிதவாதப்போக்கை கண்டித்து பூரண சுயராஜ்யம் அடைய விரும்பும் தமிழ்நாட்டு தேச பக்தர்கள்,நேதாஜி சுபாஸ் பாபுவின் தலைமையை பின்பற்றி அவர் இடும் ஆணைகளை நிறைவேற்ற எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று கேட்டுகொண்டார்.அப்போது அங்கிருந்த பல்லாயிரகணக்கான இளைஞர்கள்,”தயார்,தயார்…!” என்று ஆர்பரித்தனர்.சுபாஸ் மெய்சிலிர்க்க அந்த கூட்டம் முடிவடைந்தது.இதன் பின் மிகுந்த நம்பிக்கையுடன் நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்.

பின் காங்கிரசுக்கே உரிய கோழை பண்போடு பிரிட்டனுக்கு போராட சம்மதம் தெரிவித்தது.’ஹிட்லரின் காட்டு மிராண்டி தனத்தை ஒழிக்க இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவாக களமிறங்குகிறது,இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மீது எனக்கு அனுதாபம் உள்ளது’ என்று காந்தி அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த நேதாஜி,”ஹிட்லர் ஐரோப்பாவில் செய்த காட்டுமிராண்டிதனங்களைத் தான் இங்கிலாந்து இந்தியாவில் செய்தது.சொந்தநாட்டு மக்கள் மீது இல்லாத அனுதாபம் இங்கிலாந்து மற்றும் பிரான்சின் மீது எதற்கு?”என்று கேட்டார்.

இதன் பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நேதாஜிக்கு,நேருவுக்கும் நடந்த சில விவாதங்கள்,

நேரு சொன்னார் “உலக ஜனநாயக நாடுகள் யுத்தத்தில் பிரிட்டனை ஆதரிக்கின்றன”.

நேதாஜி,”ஜனநாயக நாடுகள் என்றால் கனடா,ஆஸ்திரேலியா போன்றவையா அல்லது பர்மா,இலங்கை போன்ற அடிமை நாடுகளா?அல்லது இவ்விரண்டிலும் சேராத நாடுகளா” எனக்கேட்டார்.அதற்க்கு பதில் வரவில்லை.

நேரு,”பாசிசம் தலைதூக்குகிறது அதை அடக்க இங்கிலாந்து,பிரான்ஸ் முயலுகிறது.

நேதாஜி,”பாசிசம் ஸ்பெயினில் தலைதூக்கியபோது இங்கிலாந்து,பிரான்ஸ் எங்கு சென்றன.மீண்டும் நிசப்தம்.

இறுதியில் நேதாஜி சொன்னார்,”ஆத்ம விசாரணைக்கு இது நேரம் இல்லை,ஒரு நாட்டின் வரலாற்றில் மிக அரிதான சந்தர்ப்பம் இது,இதை சரிவர பயன்படுத்த தவறினால்,எதிர்கால சந்ததி நம்மை கோழை என தூற்றும்,துரோகிகள் என்று சொல்லும்.”

கோழைகள்,துரோகிகள் பதில் சொல்லட்டும்,”நேதாஜி பயங்கரவாதியா?”

-Iyappan

No comments:

Post a Comment

Ads

Ads